சிவராத்திரி விரதமுறை
ADDED :2378 days ago
சிவராத்திரி விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி விரதத்தை தொடங்குதல் வேண்டும். நாள் முழுக்க உண்பது, உறங்குவது கூடாது. சோர்வு தெரியாமல் இருக்க பழச்சாறு மட்டும் குடிக்கலாம். இரவில் விழித்திருந்து சிவன் கோயிலில் நான்கு கால அபிேஷகத்தை தரிசிக்க வேண்டும். இரவு முழுவதும் ‘சிவாயநம’, ‘நமசிவாய’ மந்திரங்களை ஜபிப்பதும், சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிப்பதும் நன்மையளிக்கும். மறுநாள் பகலில் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். விநாயகர், முருகன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகாசிவராத்திரி விரதமிருக்கின்றனர்.