பத்ரகாளியம்மன் திருவிழா தொடக்கம்
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் மாசி திருவிழா, வரும், 26ல் தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு, அன்று மதியம் பொங்கல், சுவாமி புறப்பாடு நடக்கிறது. 28 காலை, விநாயகர் பூஜை, மார்ச், 7 காலை, 4:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கவுள்ளது. தொடர்ந்தது, 8 மாலை, சின்ன தேரோட்டம், 9 மாலை, பெரிய தேரோட்டம், 10 மாலை, தேர் நிலையை அடைதல், 11 இரவு சத்தாபரணம், மார்ச், 13 காலை, 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்கின்றனர்.
ஓங்காளியம்மன் கோவிலில்...: இளம்பிள்ளை அருகே, இடங்கணசாலை, மெய்யனூர்மேடு, ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று, சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. இன்று, அம்மன் திருவீதி உலா, நையாண்டி மேளம் நடக்கிறது. 26 காலை, 3:00 மணிக்கு சக்தி கரகம், பூங்கரகம் எடுத்து வருதல், 6:00 மணிக்கு உருளுதண்டம், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை, 6:00 மணிக்கு அக்னி கரகம், அலகு குத்துதல், 27 காலை, 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், 28 காலை, 6:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடையும்.