உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 28ல் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

28ல் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்போரூர், : திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும், 28ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவில் நகரங்களில் ஒன்றாக, திருப்போரூர் விளங்குகிறது. சிறப்பு வழிபாடுஇங்கு, அறுபடை வீட்டிற்கு நிகரான, மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி, சுயம்பு மூர்த்தியாக, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நித்ய நான்குகால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இந்நிலையல், இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா, வரும், 28ம் தேதி, காலை, 6:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து, தினமும், கந்தசுவாமி பெருமாள், வெவ்வேறு வாகனங்களில், வீதி உலா வருகிறார்.பிரதான தேர் திருவிழா, மார்ச், 5; தெப்போற்சவம், 8; திருக்கல்யாண உற்சவம், 11ம் தேதி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.இந்நிலையில், கோவில் விழாவால், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, முன்னேற்பாடு பணிகளை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !