உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை விழாவில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை விழாவில். காலை 9:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரை மூலை, இரட்டை விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.மதியம் 12:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயானக் கொள்ளை விழா நடந்தது. இரவு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !