நீலமங்கலம் சிவன் கோவிலில் சிவராத்திரி
ADDED :2053 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வைபவம் நாளை 21ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி அன்று அதிகாலை பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிேஷகம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்படுகிறது. ஏகாதச ருத்ரபாராயணம், காஞ்சி மகாபெரியவருக்கு பூஜையைத் தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரருக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.