உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழா: பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்

பேராளகுந்தாளம்மன் கோவில் திருவிழா: பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்

குளித்தலை: குளித்தலை, பேராளகுந்தாளம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது. குளித்தலையில், பேராளகுந்தாளம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கடந்த, 12ல் காப்பு கட்டுதல் நடந்தது. 18ல் தீர்த்தக்குடம் எடுத்தல், இரவு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. 19ல் அம்மனுக்கு இளநீர் பூஜை மற்றும் கிடாவெட்டுதல், 21ல் மாவிளக்கு பூஜை, இரவு அம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நிறைவு நாளில், கோவில் முன் பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !