உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்ரீவர் வழிபாடு: மாணவர்கள் குவிந்தனர்

ஹயக்ரீவர் வழிபாடு: மாணவர்கள் குவிந்தனர்

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், மூன்றாவது வாரமாக நடந்த ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பூஜையில், மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.

திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் ஆண்டுதோறும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, இரு வாரங்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், நேற்றும், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற வழிபாடு நடத்தினர்.அதன்படி, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு யாகம், திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம் சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. அடுத்ததாக, மார்ச் 1ம் தேதி, ஸ்ரீஹயக்ரீவர் பூஜை நடத்தப்படவுள்ளதாக, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !