படுக்கப்பெத்து அம்மன் கோயிலில் மாசி களரி விழா
ADDED :2049 days ago
சாயல்குடி : சாயல்குடி அருகே டி.கரிசல்குளத்தில் உள்ள படுக்கப்பெத்து அம்மன் கோயிலில் மாசி களரி விழா நடந்தது.
மாலையில் 504 விளக்கு பூஜை நடந்தது. இரவில் சிறுமிகளின் கோலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி, கணபதி ஹோமம், துர்கா பூஜை உள்ளிட்டவைகள் நடந்தது.மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு,காலையில் 108 பால்குடம் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு எடுத்தனர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி பெத்தராஜ், கவுரவத்தலைவர் பொன்ராஜ், தலைவர் தங்கச்சாமி,செயலாளர் சுந்தர், பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். குலதெய்வக்குடிமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.