அங்காளம்மன் வீதி உலா: குண்டம் விழா நிறைவு
ADDED :2049 days ago
பல்லடம்: அங்காளம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியுடன், பல்லடம் ஸ்ரீஅங்காளம்மன் கோவில், குண்டம் திருவிழா நிறைவு பெற்றது.
பல்லடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழா நிறைவு நாளான நேற்று, காலை 9.30க்கு, கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேகம், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, பேச்சி அம்மன் பூஜை, வசந்த விழா உள்ளிட்டவற்றுடன், அம்மன் திருவீதி உலா நடந்தது. திருச்சி ரோடு, கொசவம்பாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா நடைபெற்றது. சிம்ம வாகனத்துடன், சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீஅங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.