தங்க கவச அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன்
ADDED :2055 days ago
திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூரில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் அம்மன் அழைப்பு, வானவேடிக்கை, கம்பம்எடுத்து வருதல் நிகழ்ச்சியும், முளைப்பாரி, பால்குடம் ஊர்வலமும் நடைபெற்றது. விழாவில் இன்று தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.