நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ADDED :4906 days ago
நாகை: நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா 455 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நாகை, அபிராமியம்மன் திருவாசலில் இருந்து புறப்பட்டது. சாம்பிராணி சட்டி,நகரா மேடை உட்பட 25 க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும் பின்னும் ஊர்வலமாக சென்றது. தர்காவில் அதிகாலை 5.45 மணிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சந்தனம்பூசும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.