உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தெப்போற்சவம்: ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலையில் தெப்போற்சவம்: ஆர்ஜித சேவைகள் ரத்து

திருப்பதி : திருமலையில், நாளை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளதை முன்னிட்டு, பல ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில், ஆண்டு தோறும், மாசி மாத பவுர்ணமியை ஒட்டி, வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நாளை முதல், 9ம் தேதி வரை, திருமலையில் வருடாந்திர தெப்போற்சவம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, நாளை, நாளை மறுநாள் வசந்தோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவை; வரும், 7, 8, 9ம் தேதிகளில், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீப அலங்கரா சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் 9ம் தேதி, பவுர்ணமி அன்று நடைபெறும் கருடசேவையையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !