உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேர் திருவிழா

மூலனூர் வஞ்சியம்மன் கோவில் தேர் திருவிழா

வெள்ளகோவில்: மூலனூர் வஞ்சியம்மன் திருக்கோவில் 38 ம் ஆண்டு தேரத் திருவிழா, லட்சார்ச்சனை பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. பிப்ரவரி 17 ம் தேதி விநாயகர் வழிபாடு, தேர் முகூர்த்தக்கால், போடப்பட்டு துவங்கி நேற்று முன்தினம் மாலை பொங்கல் வைத்தல், பெண்கள் மாவிளக்கு எடுத்தல், இரவு 9 மணியளவில் திருக்கல்யாணம் நடந்தது.

நேற்று அதிகாலை வஞ்சியம்மன் திருத் தேருக்கு எழுந்தருளல், காலை 9 மணியளவில் பூவோடு எடுத்தல். நேற்று இரவு 7 .50 மணி அளவில் கோவிலைச் சுற்றக தேரோட்டம் நடந்தது. வஞ்சியம்மன் தேரின் வலப்பக்க சங்கிலியை பெண்களும் இடப்பக்க சங்கிலியை ஆண்களும் இழுத்தனர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் விநாயகர் மற்றும் கருப்பண்ணசாமி முன்செல்ல வஞ்சியம்மன் திருத்தேர் தொடர்ந்து சென்றது. இரவு 10 மணியளவில் திருத்தேர் நிலைக்கு வந்து சேரும்.இன்று அதிகாலை தீர்த்த காவடிக்கு சென்று மதியம் இரண்டு மணியளவில் தீர்த்த அபிஷேகம் நடக்கிறது. இரவு கும்பம்,கம்பம், கிணற்றில் விடுதல். நாளை வெள்ளிக்கிழமை காலை கொடி இறக்கத்துடன் யாக பூஜை நிறைவடைகிறது. சிறப்பு அபிஷேகம் மஞ்சள் நீர் அபிஷேகம் தீபாராதனை, பிரசாதம் வழங்குதலுடன் விழா இனிதே நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கோவில் குடிப் பாட்டுக்காரர்கள் மூலனூர் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !