உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிகாலசோழீஸ்வரர் கோயிலில் மாசி திருக்கல்யாணம்

கரிகாலசோழீஸ்வரர் கோயிலில் மாசி திருக்கல்யாணம்

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை சிவகாமி அம்மன் சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் 6 ம் நாள் மாசி திருவிழாவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இக்கோயிலில் பிப்., 26 காலை 6:30 மணிக்கு முகூர்த்த கால் நாட்டலுடன் மாசித்திருவிழா துவங்கியது. 2ம் நாள் வாஸ்து சாந்தி, கணபதி ேஹாமம், விக்னேஸ்வர பூஜைகள், 3ம் நாளில் காப்பு கட்டுதல் பூஜை நடந்தது. தினமும் சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்தனர்.

விழாவின் 6 ம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இரவு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 9 ம் தேதி வரை மாசி திருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாளான மார்ச் 8 அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளுவர். சுவாமிக்கு 10:15 மணிக்கு சிறப்பு பூஜை செய்ததும்,தேரோட்டம் நடைபெறும்.  திருவிழாவின் ஒவ்வொரு நாளும் யாகசாலை, நாதஸ்வர கச்சேரி, வேதபாராயணம் நடைபெற்று வருகிறது. கோயில் கண்காணிப்பாளர்  சரவணகணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோவன் விழா  ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !