திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பக்தர்கள் கிரிவலம் செல்ல, உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு, மாசி மாத பவுர்ணமி திதி, வரும், 9 அதிகாலை, 2:09 மணி முதல், 10 அதிகாலை, 12:04 மணி வரை, உள்ளது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 8ல், வள்ளாள மஹாராஜாவுக்கு, அருணாசலேஸ்வரர் குழந்தையாக பிறந்தார் என, தல புராண வரலாற்றை நினைவு கூறும் வகையில், பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்துக்கு, அருணாசலேஸ்வரர் சென்று, தன் தந்தையான வள்ளாள மஹாராஜாவுக்கு, துரிஞ்சலாற்றங்கரையில் திதி கொடுக்கும், தீர்த்தவாரி நிகழ்வும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.