உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய்பாபா சிலை

பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீசத்ய சாய்பாபா சிலை

புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் சிலை, பூஜைகள் செய்யப்பட்டு, பிரசாந்தி நிலையத்தில் உள்ள பஜனை ஹாலில் மீண்டும் நிறுவப்பட்டது.

2002ல் சத்யசாய்பாபாவின் சிலை, பிரசாந்தி நிலையத்தில், பூர்ண சந்திர ஆடிட்டோரியத்தில் வைக்கப்பட்டது. அப்போது சுவாமி, பிருந்தாவனத்தில் இருந்தார். சில நாட்கள் கழித்து அவர் திரும்பியபோது, சிலையைக் காண, ஆடிட்டோரியம் சென்றார். அங்கிருந்த தனக்கு சேவை செய்யும் சிறுவர்களிடம் சிலை எப்படி உள்ளது எனக் கேட்டபோது அவர்கள் பதில் சொல்ல தயங்கினர்.

ரத்தமும், சதையுமாய் நம்மிடையே இருக்கும் சத்ய சாய்பாபாவை, சிலையாக காண அவர்களுக்கு மனம் வரவில்லை. இதனை உணர்ந்த பகவான், இப்போது இந்த உடல் இங்கு இருக்கிறது. அது இல்லாத போது நீங்கள் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கு சிறுவர்கள், சுவாமி.. நீங்கள் இப்போது இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத நாட்களை நாங்கள் சிந்திக்க விரும்பவில்லை என்றனர்.

பின் அந்த சிறுவர்களிடம் பகவான், நான் எப்போது வர வேண்டும் என்பதை முடிவு செய்தது போல, எப்போது செல்ல வேண்டும் என்பதையும் நானே முடிவு செய்வேன். நான் 96 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன் என நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் விரும்பும் இடத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் உடலை தாண்டி உண்மையான சுவாமியாக பாருங்கள். உண்மையான சுவாமியாக சிந்தியுங்கள்! என்றார். இதனைதொடர்ந்து 2002ல் சத்யசாய் பாபாவின் சிலை, சாய் குல்வந்த் ஹாலில் நிறுவப்பட்டு, பின், பஜனை ஹாலுக்கு மாற்றப்பட்டு, சன்னதியில் நிறுவப்பட்டது. சிலைக்கு அடியில் சுவாமியே அப்போது தெய்வீக யந்திரத்தை வைத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பகவான் அவர்களால் அந்த சிலை நிறுவப்பட்டது போலவே, இப்போதும் பூஜைகள் செய்யப்பட்டு, பஜனை ஹாலில் உள்ள சன்னதியில் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !