ராஜபாளையம் சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் மாசிமக பிரம்மோற்ஸவ விழா பிப். 28 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்து வருகிறது.ஏழாம் நாளான நேற்று காலை 9:00 மணிக்கு சுந்தரேஸ்வர சுவாமி, மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அம்மனுக்கு ராம மந்திரத்தில் இருந்து மணமகள் சீர் மற்றும் கோதண்டராமர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை சீர் கொண்டு வரப்பட்டது. மேள தாளங்கள் முழங்க நடந்த இதில். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதமாக இனிப்பு, மஞ்சள் கயிறு, குங்குமம் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி, அம்பாள் பூப்பல்லக்கில் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.