சொக்காத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :2053 days ago
சாலவாக்கம்: சாலவாக்கம், சொக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கோலாகலமாக நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், 600 ஆண்டுகள் பழமையான, சொக்காத்தம்மன் கோவில், கிராம கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.இக்கோவிலின் மேல்தளம் உள்ளிட்ட, கட்டடப் பகுதிகள் சேதமடைந்ததால், ஓராண்டாக திருப்பணிகள் நடந்து வந்தன. பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று முன்தினம், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.நான்கு கால பூஜைகள் முடிந்து, நேற்று காலை, 8:30 மணிக்கு, கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.