சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா துவக்கம்
ADDED :2055 days ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா துவங்கியது. இதில், கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில், அம்மன்னுக்கு சாத்துவதற்காக பூக்கூடைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழா விமரிசையாக தொடங்கியது. விழானை முன்னிட்டு, பக்தர்கள் பூ தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்களை கொண்டு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.