உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டு மாரியம்மன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

தண்டு மாரியம்மன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

 திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த குமாரப்பாளையம் கிராமத்தில் தண்டு மாரியம்மன் கோவிலில், மாசிமக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது.இதனையொட்டி, காலை 10:30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. இதில், குமாரப்பாளையம், புதுக்குப்பம், பிடாரிப்பட்டு, மணவெளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சுற்று வட்டார மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !