அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி
ADDED :2120 days ago
திருவண்ணாமலை : மாசி மகத்தையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது.
மாசி மகத்தையொட்டி, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராம கவுதம் நதிக்கரையில், அண்ணாமலையாருக்கு “சூலம் ரூபத்தில்” தீர்த்தவாரி நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கவுதம் நதிக்கரையில், சுவாமிக்கு தீர்த்தவாரி முடிந்தயுடன் ஏராளமான பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.