மஸ்ட் மாத்துார் ஐந்நுாற்றீஸ்வரர் கோவிலில் பிரமோற்ஸவ விழா
ADDED :2070 days ago
தேவகோட்டை: மாத்துார் ஐந்நுாற்றீஸ்வரர் கோவில் பிரமோற்ஸவ விழா கடந்த 28 ந்தேதி கணபதி ஹோமம்,தொடர்ந்து கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும், ஐந்நுாற்றீஸ்வரர் சுவாமி, பெரியநாயகி அம்பாள், மற்றும் விநாயகர்,முருகப் பெருமான், மகிழ்ம முனீஸ்வரருக்கு காலை , மாலை இரு வேளைகளிலும் சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தன.இரவில் சுவாமி அம்பாள் சிறப்பு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஐந்தாம் நாள் சுவாமி,அம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ஒன்பதாம் நாளன்று சுவாமி, அம்பாள் பரிவார தெய்வங்களுடன் தேரில் வர பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை மாத்துார் கோவில் அறங்காவலர்கள், நகரத்தார்கள் செய்திருந்தனர்.