கூனிமேடு கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி
ADDED :2051 days ago
மரக்காணம்: மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நடந்தது.
மரக்காணம் அடுத்த கூனிமேடுகுப்பம் கடற்கரையில் 23 ஆம் ஆண்டு மாசிமக திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, ஓமிப்பேர் அடசல், முன்னூர், கொள்ளுமேடு, கொழுவாரி, கெங்கையம்மன் நகர், நொச்சிக்குப்பம், உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் பூ அலங்காரம் செய்து வாகனங்களில் அம்மன் சிலைகளை ஏற்றிக்கொண்டு தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துகொண்டு, கூனிமேடுகுப்பம் கடற்கறையில் தீர்த்தவரி செய்தனர்.தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.