உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்

திருக்கோஷ்டியூர் தெப்ப உற்சவம் கோலாகலம்: பக்தர்கள் குவிந்தனர்

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தெப்பம் வலம் வந்தது.கொளுத்தும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை ஸ்ரீதேவி பூதேவியருடன் தரிசித்தனர்.

பிப்.,29ல் கொடியேற்றத்துடன் தெப்ப உற்சவம் துவங்கியது. தினமும் பெருமாள் தேவியருடன் பல வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடந்தது.நேற்று வெண்ணெய்த்தாழி சேவை அலங்காரத்தில் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்தது. காலை 7.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து, சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் புறப்பாடு துவங்கியது. தங்கப்பல்லக்கில் திருவீதி புறப்பாடும், முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களின் சேவைக்குப் பின்னர் தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார். மண்டபத்தில் பெருமாளுக்கு திருவந்திக்காப்பு நடந்தது. பகல் 12 மணிக்கு தெப்பக்குளத்தில் சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி,பூதேவியுடன் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !