பழநி மாசித் திருவிழா: மாரியம்மன் திருக்கல்யாணம்
ADDED :2359 days ago
பழநி : பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.பழநி கிழக்குரதவீதி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழா பிப்.,21ல் துவங்கியது. கோயில் முன் பிப்.,25ல் திருக்கம்பம் சாட்டும், மார்ச் 3ல் கொடியேற்றமும் நடந்தது.நேற்று (மார்ச் 10) இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. பின் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நான்கு ரதவீதிகளிலும் நடைபெறும். நாளை (மார்ச் 12) நள்ளிரவு 3:00 மணிக்கு திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் முடிந்து, கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.