ஐயப்ப சேவா சமாஜ கூட்டம்
ADDED :2053 days ago
பழநி : பழநியில் நடந்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதில் தேசிய பொதுசெயலாளர் ஈரோடு ராஜன் கூறியதாவது: தற்போது எங்கள் சார்பில் பக்தர்களுக்கு சபரிமலையில் அன்னதானம், இலவச மருத்துவம், ஆம்புலன்ஸ் சேவை செய்யப்படுகிறது. சபரிமலைக்கு வருபவர்களுக்கு கேரள எல்லையில் 12 இடங்களில் அன்னதானக்கூடம், தங்குமிடம், சபரிமலை நிகழ்ச்சிகளை காண திரையரங்கம், பம்பையிலிருந்து சன்னிதானம் வரை அன்னதானம் செய்ய உள்ளோம், என்றார்.இதில் மாநில தலைவர் ராஜகோபால் துரைராஜ், மாநில பொதுசெயலாளர் பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் சந்திரமௌலீஸ்வரர் கலந்துகொண்டனர்.