கோட்டீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம்
செஞ்சி : பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேல்மலையனுார் அடுத்த பெருவளூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி உத்திர திருவிழா வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 4ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு தலைமை தாங்கினார். மேலாளர் மணி வரவேற்றார்.கூட்டத்தில், தேர் பவனி நடைபெறும் மாடவீதிகளில் சாலைகளை சரி செய்வது, மின் கம்பிகளை தேர் நடைபெறும் அன்று அகற்றுவது, சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம் அமைப்பது, குடிநீர் வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.