சித்தானந்த சுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2142 days ago
புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது. கருவடிக்குப்பத்தில், பிரசித்திபெற்ற, குரு சித்தானந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்குள்ள சுந்தர விநாயகர் சன்னிதியில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, மாலை 5:30 மணியளவில் மகா கணபதி ஹோமம் நடந்தது. 7:30 மணிக்கு, சுந்தர விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர்.