வீரபாண்டி சித்திரை திருவிழா பொழுதுபோக்கு ராட்டினம் ரூ.1.7 கோடிக்கு
ADDED :2042 days ago
ஏலம்போனது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் ஒருவாரம் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மே 12 ம் தேதி முதல் 19 ம்தேதிவரை நடைபெற உள்ளது. இத் திருவிழாவில் பொழுது போக்கு அம்சங்கள் ராட்டினம் அமைத்தல், திருவிழா தற்காலிக கடைகள் அமைத்தல், கண்மலர் நேர்த்திக்கடன் செலுத்துதல் போன்றவற்றிற்கு நேற்று ஏலம் நடந்தது. அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, கோயில் செயல் அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில் பொழுதுபோக்கு விளையாட்டு ராட்டினம் அமைக்க ரூ.1 கோடியே 7 லட்சத்திற்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டைவிட ரூ.37 லட்சம் கூடுதலாகும். கண்மலர் கட்டணம் வசூலிக்கும் உரிமம் ரூ.2.85 லட்சத்திற்கு போனது. கடந்த ஆண்டை விட ரூ.20 ஆயிரம் அதிகம். தற்காலிக கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை