பிடாரி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு உற்சவம்
ADDED :2045 days ago
கடலுார்: கடலுார் பிடாரி அம்மன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு உற்சவம் நடந்தது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பிடாரி அம்மன் கோவிலில் 75ம் ஆண்டு 108 திருக்குட நன்னீராட்டு உற்சவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதன்படி, நேற்று, மூலவர் சக்தி பீடங்களுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.அதனைத் தொடர்ந்து, முக்கிய வீதிகள் வழியாக உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.