உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போலீசார் கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

போலீசார் கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, டவுன் போலீஸ் ஸ்டஷேன் யொட்டி போலீசார் ஒன்றிணைந்து மாரியம்மன் கோயில் கட்டியதோடு இதன் கும்பாபிஷேகத்தில்  அனைத்து மதத்தினரையும்  பங்கேற்க செய்து  மத நல்லிணக்க விழாவாக நடத்தி உள்ளனர். தன்னலம் இல்லாமல் பொது காரியங்களில் ஈடுபடுவதில்  சிறிது   கவனம் தவறினாலும் நம்மை தவறாக நினைத்து விடுவர். இதனாலே  பொது காரியங்களில் ஈடுபடுவதற்கு பலரும் யோசனை செய்வர். அதிலும்  ஒரு கோயில் கட்டுவது என்பது எளிதல்ல பலருடைய உழைப்பு தேவை.இதை ஏற்று செய்வதற்கு நல் உள்ளம் கொண்டவர்கள்  என  பலரும்  கூடி வந்தால் தான் கோயில் கட்டுவது  என்பது சாத்தியம்.

அந்தவகையில்  அருப்புக்கோட்டை டவுண்  இன்ஸ்பெக்டர் பாலமுருகன்  போலீஸ் பணி தவிர  சுற்றுபுற சூழலை சுத்தமாக வைத்து கொள்வது, இயற்கையை பேணி பாதுகாப்பது போன்ற பணிகளில் ஆர்வம் கொண்டவர். தான் பணிபுரியும்  ஸ்டஷேன் அருகே போலீசார்களுக்கு நவீன உடற் பயிற்சி கூடம், நுாலகம், குடியிருப்பு பகுதியில் பூங்கா  அமைத்து கொடுத்துள்ளார்.  இதோடு ஸ்டஷேன் பின்புறம் சிறிய பீடத்துடன் இருந்த சந்தன மாரியம்மன் கோயிலை  புதியதாக  கட்ட முடிவு செய்தார்.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்பணி  இடைவிடாது நடந்து இன்று பெரிய கோயிலாக உருவாகி கும்பாபிஷேகமும் நடந்துள்ளது. ஓய்வு நேரங்களில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை அனைவரும்  ஒன்று சேர்ந்து   கோயிலை கட்டி முடித்துள்ளனர்.இதன் கும்பாபிஷேகம்   நேற்று  நடந்தது. இதற்காக  நவக்கிரகேஹாமம், வரலட்சுமிேஹாமம், வேத பாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உட்பட  பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில்  மத நல்லிணக்கத்ததை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதம்  ,சமுதாயத்தினர்   கலந்து கொண்டனர். இஸ்லாமிய  பிரமுகர்கள் பக்தியுடன்  தரிசித்தது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது. இதோடு அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்கு  சீர்வரிசை  வழங்கினர்.  அன்னதானமும் நடந்தது.  சாத்துார் ராமச்சந்திரன்  எம்.எல்.ஏ., ஆர்.டி.ஒ., செல்லப்பா, டி.எஸ்.பி., வெங்கடஷேன், அனைத்து அரசு துறையினர் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !