கொண்டீஸ்சுவரர் கோவிலில் உழவார பணி
ADDED :2147 days ago
செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டை அடுத்த, தண்டலம் கிராமத்தில் உள்ள கொண்டீஸ்சுவரர் கோவிலில், நேற்று, உழவாரப் பணி நடந்தது.
செவ்வாப்பேட்டை அடுத்த, தண்டலம் கிராமத்தில் உள்ளது காமாட்சி அம்மன் சமேத கொண்டீஸ்சுவரர் கோவில். 1,300 ஆண்டுகள் பழமையான தலைமுறை சாபம் மற்றும் கல்யாண தடை நீங்கும் தலமான உள்ள இந்த கோவிலில், நேற்று சென்னை, திருமுல்லைவாயல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி சார்பில் உழவாரப் பணி நடந்தது.நிகழ்ச்சியில், சிவனடியார்கள், கிராம மக்கள் கலந்து, கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோவிலில், முதல் முறையாக சிவனாடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க, உழவாரப் பணி துவங்கியது.இதன் பின், கோவில் முழுவதும் முட்புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன