திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கருடவாகனத்தில் உலா
ADDED :2141 days ago
திருநீர்மலை: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவில் ஐந்தாம் நாளில், நீர் வண்ண பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, நீர்வண்ண பெருமாளுக்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கும். இந்தாண்டும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில், ஐந்தாம் நாளில் நீர்வண்ண பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளுவதற்க்கு முன்னதாக உய்யாலி நடனம் ஆடி தோளில் சுமந்து சென்றனர். பின் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.