இருமனம் இணையும் திருமணம்
ADDED :2206 days ago
திருமணம் என்பது இருமனங்களை இணைக்கும் பந்தம். இது மகிழ்ச்சியும், குதுாகலமும் நிறைந்தது மட்டுமல்ல. ஆணும், பெண்ணும் வாழ்க்கை முழுவதும் ஒருவருக்கொருவர் தோழராகவும், துணைவராகவும் இருப்பதற்கான ஒப்பந்தம். இந்த பந்தத்திற்கு இறைவனும், படைப்பினங்களான மக்களும் சாட்சிகளாக இருப்பர்.