இதுவே மேலான இன்பம்
ADDED :2205 days ago
ஒரு சமயம் தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் நாயகம். அப்போது அவரது செவிலித்தாய் ஹலீமாவின் கணவர் வந்தார். உடனே தான் அமர்ந்திருந்த விரிப்பின் ஒரு முனையை விரித்து அமரச் செய்தார். அதன்பின் ஹலீமாவின் தாயார் வரவே அவருக்கு மற்றொரு முனையை விரித்துக் கொடுத்தார். இதையடுத்து ஹலீமாவின் சகோதரரும் அங்கு வந்தார். சற்றும் யோசிக்காமல் எழுந்து தன் இடத்தையே விட்டுக் கொடுத்தார். பிறருக்காக விட்டுக் கொடுப்பதே மேலான இன்பம் என்பதை இதன் மூலம் உணர்த்தினார்.