உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் திரளாக ஜெயின் மக்கள் பங்கேற்பு

மகாவீர் ஜெயந்தி ஊர்வலம் திரளாக ஜெயின் மக்கள் பங்கேற்பு

குன்னுார்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சங்கம் மற்றும் ஜெயின் நவியூக் சங்கம் ஆகியவை இணைந்து மகாவீர் ஜென்மோட்சவ் விழாவை நடத்தின.


நாடு முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . இதன் ஒரு பகுதியாக, ஊட்டி, குன்னுாரில் மகாவீர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னுார் ஜெயின் சங்கம் மற்றும் ஜெயின் நவ்யுவக் சங்கம் ஆகியவை இணைந்து மகாவீர் ஜனமோத்சவ் விழாவை நடத்தின. குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட் நீதிமன்ற வளாகம் வழியாக ஜெயின் கோவிலை அடைந்தது. இதேபோல, ஊட்டி ஜெயின் கோவில் கோவில் அருகே துவங்கிய ஊர்வலம், கமர்ஷியல் சாலை வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் ஜெயின் சமூக மக்கள் பக்தி பஜனை பாடல்களை பாடியும். நடனமாடியும் பங்கேற்றனர். கோவில்களில் பஜனை, அன்னதானம் இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !