தந்தை போல அவரும் நல்லவரே
பாதிரியார் ஒருவர் தேவாலயத்தில் கூடியிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இமானுவேல் என்னும் சிறுவன் மேடையேறி நின்றான். ஆனால் கேள்வி கேட்க தயங்கினான். விரக்தியும், சோகமும் அவனது முகத்தில் தெரிந்தது. அவனை அருகில் அழைத்த பாதிரியார் காதில் ரகசியமாக சொல்லும்படி கேட்டார். இருவரும் உரையாடியதால் கூட்டத்தில் அமைதி நிலவியது. பின் சிறுவனின் அனுமதியுடன் கேள்வியை ஒலிபெருக்கியில் தெரிவித்தார். நாத்திகரான அவனது தந்தை இறந்து சில நாட்களே ஆகிறது. ஆனால் பிள்ளைகளிடம் அவர் தனது கருத்தை திணிக்கவில்லை. அச்சிறுவன் ‛‛ நாத்திகரான தந்தை ஆண்டவரை புறக்கணித்தாலும் எங்களுக்கு நல்லதை மட்டுமே செய்தார். அவருக்கு விண்ணகத்தில் இடம் உண்டா’’ எனக் கேட்டான். ‛‛ ‘‘நிச்சயம் இடம் உண்டு. ஏனெனில் ஆண்டவரும் உன் தந்தையைப் போல மிக நல்லவர்’’ என உரக்கச் சொல்லி சிறுவனை அணைத்துக் கொண்டார். மகிழ்ச்சியால் சிறுவன் ஆனந்தக்கண்ணீரைச் சிந்தினான்.