உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஞ்சி வரதப்பா! என்னைக் காப்பாத்தப்பா!

கஞ்சி வரதப்பா! என்னைக் காப்பாத்தப்பா!

காஞ்சிபுரத்தை கஞ்சி என்று சுருக்கமாக குறிப்பிடுவர். இங்குள்ள வரதராஜப்பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். பேரருளாளப்பெருமாள் என்றும் இவருக்கு பெயருண்டு.  பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்ட அன்பர் ஒருவர், ஆஸ்பத்திரியில் அவதிப்பட்டு வந்தார். அடிக்கடி கஞ்சி வரதப்பா என்று சொல்லி அரற்றினார். பெருமாளைப் பற்றி அறியாத சாப்பாட்டு ராமன் ஒருவன், பக்கத்தில் படுத்திருந்தான். ஆஸ்பத்திரி ஊழியர்கள் கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்று எண்ணி துள்ளி எழுந்தான். ஆனால், யாரும் சாப்பாடு கொண்டு வருவது போல தெரியவில்லை. பக்தரிடம் எங்கே வருதப்பா என்று வருத்தத்துடன் கேட்டான்.   அவனிடம், அடேய்! நான் அந்தக் கஞ்சியைச் சொல்லவில்லை.  கஞ்சி வரதப்பா! என்னைக் காப்பாத்தப்பா! என்று பெருமாளை வேண்டிக்கொண்டேன், என்ற பிறகு தான், ஓ நீர் அந்த அர்த்தத்தில் சொன்னீரா? என்று மீண்டும் இழுத்து மூடிபடுத்துக்கொண்டான்.கஞ்சி வரதப்பா! என்னைக் காப்பாத்தப்பா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !