உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரிக்கு வரவேண்டாம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சதுரகிரிக்கு வரவேண்டாம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் :கொரோனா பீதியால் மறு அறிவிப்பு வரும்வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.பங்குனி அமாவாசைக்காக நாளை முதல் (மார்ச் 21) நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் அனுமதித்திருந்தது. தேவையான மருத்துவகுழுவினரையும் கோரியிருந்தது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்களுக்கு வருவதற்கு அனுமதியில்லை என கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !