திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நடை சாத்தல்
ADDED :2085 days ago
திருப்பரங்குன்றம் : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 31 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இக்கோயிலில் கால பூஜைகள் முடிந்ததும் நடை சாத்தப்பட்டது. சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கோயில் வாசலில் கேட் முன்பு நின்று தரிசனம் செய்து சென்றனர். கோயிலில் தினமும் நடக்கும் ஆறு கால பூஜைகள் மட்டும் நடக்கும் என கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.