ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய பூஜை ரத்து
ADDED :2048 days ago
திருத்தணி : கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில் நடைபெற இருந்த சூர்ய பூஜை, கொரோனா வைரஸ் எதிரொலியால், நிறுத்தம் செய்யப்பட்டது.
திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலில், ஆண்டுதோறும், பங்குனி மாதம், 13ம் தேதி முதல், மூன்று நாட்கள் சூர்ய பூஜை நடைபெறும்.அந்த வகையில், நடப்பாண்டில், வரும், 26ம் தேதி முதல், 28ம் தேதி வரை நடக்கவிருந்த சூர்யபூஜை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.