உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உருவாட்டி பெரியநாயகி அம்மன்கோயில் தேர் திருவிழா ரத்து

உருவாட்டி பெரியநாயகி அம்மன்கோயில் தேர் திருவிழா ரத்து

சிவகங்கை: காளையார் கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன் தெரிவித்தார். இக்கோயிலில் பங்குனி உற்ஸவ தேர் திருவிழா மார்ச் 28 ல் துவங்கி ஏப்.,6 வரை நடப்பதாக இருந்தது. காப்பு கட்டுதல், தேர் திருவிழா என 10 நாட்கள் விழா நடைபெறும். தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அரசு உத்தரவுபடி, இங்கு நடப்பதாக இருந்த பங்குனி உற்ஸவ தேர்திருவிழா ரத்து செய்யப்படுகிறது, என்றார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !