கீதை காட்டும் பாதை
ADDED :2129 days ago
ஸ்லோகம்:
ஸ்ரோத்ரம் சக்ஷு ஸ்பர்ஸதம் ச
ரஸநம் க்ராணமேவ ச!
அதிஷ்டாய மநஸ்சாயம்
விஷயாநுபேஸவதே!!
உத்க்ராமந்தம் ஸ்திதம் வாபி
புஞ்ஜாநம் வா குணாந்விதம்1
விமூடா நாநுபஸ்யந்தி
பஸ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ:!!
பொருள்:
கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்புலன்களின் உதவியுடன், மனம் என்னும் கருவி மூலம் உயிரானது அனுபவங்களை பெறுகிறது. இந்த உயிரை, அது உடலை விட்டு வெளியேறும் போதோ, சுகபோகங்களை அனுபவிக்கும் போதோ, முக்குணங்களுடன் செயல்படும் போதோ நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் விவேகம் மிக்க துறவிகள் ஞானக்கண்களால் உணர்ந்து மகிழ்வர்.