உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி விழா ஒத்திவைப்பு

ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி விழா ஒத்திவைப்பு

புன்செய்புளியம்பட்டி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, புன்செய்புளியம்பட்டி, ஊத்துக்குளி அம்மன் கோவிலில் நடைபெறவிருந்த யுகாதி விழா ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: புன்செய்புளியம்பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பண்டிகை நாளை (இன்று) ஊத்துக்குளி அம்மன் கோவிலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அரசின் அரசாணைப்படி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பண்டிகை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. நிலைமை சீரடைந்தவுடன், யுகாதி விழா நடக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !