மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2015 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2015 days ago
சபரிமலை: சபரிமலையில், பங்குனி உத்திர ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி, நடை திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா, மார்ச், 29 காலை கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 7ல் ஆராட்டுடன் நிறைவு பெறுவதாக, அறிவிக்கப்பட்டிருந்தது. 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு கூறியிருந்தது.ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் அனைத்து கோவில்களிலும், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சபரிமலை நடை, மார்ச், 28ல் திறக்காது. ரத்து செய்யப்பட்ட திருவிழா, தந்திரியின் ஆலோசனை பெற்று, வேறு தேதியில் நடத்தப்படும் என, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2015 days ago
2015 days ago