சுப்ரமணிய சுவாமி மீது சூரிய ஒளிகதிர்
ADDED :2061 days ago
திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு சுப்ரமணிய சுவாமி கோவில் மூலவர் மீது நேரடியாக சூரிய ஒளிகதிர் விழும் நிகழ்வு நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து ஆறு நாட்கள் மூலவர் சுவாமி மீது நேரடியாக சூரிய ஒளி விழும் நிகழ்வு நடப்பது வழக்கம். இந்நிலையில், மண்ணாடிப்பட்டு சுப்ரமணிய சுவாமி மூலவர் மீது, நேரடியாக சூரிய ஒளி கதிர் விழும் நிகழ்வு நேற்று முன்தினம் காலை 7:10 மணிக்கு துவங்கி, காலை 7:25 மணி வரை நடந்தது.இதனையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.