அறிவுரைக்கு அளவிருக்கு!
ADDED :2129 days ago
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் என்பவர் வாரம்தோறும் வியாழக்கிழமையில் மக்களுக்கு அறிவுரை வழங்குவார். அவரிடம் ஒருவர், “நீங்கள் எங்களுக்கு தினமும் அறிவுரை கூறலாமா?’’ எனக் கேட்டார்.
‘நாள்தோறும் அறிவுரை கேட்டால் சலிப்புக்கு ஆளாவீர்கள். எந்த விஷயத்தையும் நடைமுறைப்படுத்த உரிய காலமும் தேவைப்படும் என்பதால் நாயகம் குறிப்பிட்ட இடைவெளி விட்டே அறிவுரைகளை போதிப்பார். நானும் அதையே பின்பற்றுகிறேன்’’ என்றார்.
தேவைக்கு அதிகமாக செய்வதை விட, அளவுடன் கையாள்வதே கூடுதல் பலன் அளிக்கும்.