பூட்டிய காளியம்மன் கோவில் முன்பாக வழிபாடு
ADDED :2078 days ago
எழுமலை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடையுத்தரவைத் தொடர்ந்து எழுமலை பொட்டல் காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா பூட்டப்பட்ட கோவில் முன்பாக நடைபெற்றது. பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் சென்று அம்மனை அலங்காரம் செய்திருந்தனர். பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்காததால் அக்கினிச்சட்டி, மாவிளக்கு நேர்த்திகடன் செய்ய வந்த பக்தர்கள் பூட்டிய கோவிலுக்கு முன்பாக நின்று வழிபாடு செய்தனர்.