நீலகண்டி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் ஒத்திவைப்பு
ADDED :2078 days ago
திருப்பூர்:பொங்கலுாரில் உள்ள பொன்னங்குல கொங்கு வேளாளர் குலதெய்வம் ஸ்ரீ நீலகண்டியம்மன், மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சவுந்தரநாயகி உடனமர் பசுபதீஸ்வரர் கோவில், கும்பாபிேஷகம், இன்று நடக்க இருந்தது. கொரோனாவால், கும்பாபிேஷகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஸ்ரீ நீலகண்டி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் கார்த்திக் கூறியதாவது:தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க வேண்டிய காரணத்தினால், கும்பாபிஷேக விழா, அனைத்து பக்தர்களின் நன்மைக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சூழல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின், கும்பாபிஷேக தேதி பின்னர்அறிவிக்கப்படும். இந்த முடிவுக்கு, அனைவரும் ஒத்துழைப்பு தர கேட்டு கொள்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.