உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.31.85 லட்சம் காணிக்கை

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில் ரூ.31.85 லட்சம் காணிக்கை

அவிநாசி: கடந்த, 2025 ஜூன் 17ம் தேதி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி, சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன்பின், இந்தாண்டில் முதல் முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் தமிழ்வாணன், செயல் அலுவலர் சபரீஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். கரூர் மண்டல உதவி ஆணையர் கணபதி முருகன் முன்னிலை வகித்தார். இதில், 90 பேர் பங்கேற்று பக்தர்கள் அளித்த காணிக்கைகளை எண்ணினர். அதில், 31 லட்சத்து 85 ஆயிரத்து 530 ரூபாய் ரொக்கம், தங்க இனங்கள் 91.200 கிராம், வெள்ளி இனங்கள் 188.500 கிராம் ஆகியன இருந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !